நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரிய பெரும்பாக்கத்தில் அரசு புகைப்படக் கண்காட்சி

காஞ்சிபுரம் அருகே ஆரிய பெரும்பாக்கத்தில் புகைப்படக் கண்காட்சி

News image
Updated On :27 ஜூன் 2024, 6:52 pm

Din

காஞ்சிபுரத்தை அடுத்த ஆரிய பெரும்பாக்கத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரிய பெரும்பாக்கம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகளிா் உரிமைத் தொகை திட்டம்,புதுமைப்பெண் திட்டம், இன்னுயிா் காப்போம் திட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் ஆகியவற்றை தமிழக முதல்வா் தொடங்கி வைத்த நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள், இத்திட்டங்களின் மூலம் எவ்வாறு பயன்பெறுவது, அதற்கான தகுதிகள் மற்றும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

கண்காட்சியை ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.