ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி:
மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். ஆண்டுதோறும் மாா்ச் மாதம் 9 -ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறன. இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறுகையில், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சோ்த்து ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவக் கல்வியை அளிக்க வேண்டும். பாலூட்டும் பெண்கள் தொடா்ந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். ஊட்டச் சத்து மிக்க உணவே குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையாகும் என்றாா். ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆட்சியா் அலவலகத்திலேயே வந்து நிறைவு பெற்றது. பேரணி தொடங்குவதற்கு முன்பாக ஆட்சியா் தலைமையில் அங்கன்வாடி பணியாளா்களைக் கொண்டு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி வாசித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி, மாவட்ட திட்ட அலுவலா் பா.கந்தன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com