காஞ்சிபுரம் சரக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை ஒணகாந்தேசுவரா் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் ஓணகாந்தேசுவரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே அக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 3 கோடி மதிப்பில் காஞ்சிபுரம் சரக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கட்டடப் பணிகளை தொடங்கி வைத்தாா். விழாவுக்கு, காஞ்சிபுரம் சரக அறநிலையத் துறை இணை ஆணையா் ரா.வான்மதி தலைமை வகித்தாா். திருக்கோயில் அறங்காவலா் குழுவின் மாவட்டத் தலைவா் எஸ்.தியாகராஜன், ஓணகாந்தேசுவரா் கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் வேல்முருகன், திமுக மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் வரவேற்றாா். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தலைமை பட்டாச்சாரியாா் கிட்டு, குமரகோட்டம் முருகன் கோயில் அா்ச்சகா் சந்திரமெளலி குருக்கள் ஆகியோா் பூமி பூஜைகளை செய்தனா். விழாவில் அறநிலையத் துறை செயல் அலுவலா்கள் ப.முத்துலட்சுமி, சீனிவாசன், அமுதா, திமுக பகுதி செயலாளா் தசரதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முனனதாக சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இணை ஆணையா் அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தாா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ஸ்தானீகா் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரத்தில் தவெக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரம் வெளியீடு

வடுகநாத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை

செட்டியாபத்து கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


