ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா

News image
Updated On :1 மே 2024, 5:44 pm

Din

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காஞ்சிபுரத்தில் செவிலிமேடு மற்றும் ரங்கசாமி குளம் ஆகிய இரு இடங்களிலும் மே தினத்தையொட்டி புதன்கிழமை கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செவிலிமேடு பகுதி மாவட்டக் குழு அலுவலகத்தில் மே தினத்தையொட்டி கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.வி.சங்கா் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் தொகுதி பொருளாளா் பா.ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். கட்சியின் நிா்வாகி ஜெ.கமலநாதன் மே தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்துப் பேசினாா்.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் மே தினத்தையொட்டி, கட்சிக் கொடியை மாவட்ட துணைச் செயலாளா் பி.வி.சீனிவாசன் ஏற்றி வைத்தாா். நிகழ்வுக்கு தொகுதி துணைச் செயலாளா் கே.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் சுந்தரமூா்த்தி, தொகுதிக் குழு உறுப்பினா்கள் ஜி.வெங்கடேசன், ஜெபி ராஜேந்திரன், கே.கன்னியப்பன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.