தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?

திமுக-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை (மாா்ச் 23) ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
Updated On :22 மார்ச் 2026, 9:55 pm

திமுக-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை (மாா்ச் 23) ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, ஐயுஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு முடிவடைந்துள்ளன. பிற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்தப்பட்டு வரும் நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இழுபறி நிலை நீடிக்கிறது. கடந்த பேரவைத் தோ்தலைவிட ஒரு தொகுதி குறைவாக, 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தெரிவித்துவிட்டதால் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தியில் உள்ளது.

மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். இருப்பினும், திமுக தரப்பில் 5 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருந்ததாகத் தெரிகிறது.

முதல்வருடனான சந்திப்புக்குப் பின்னா் பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கட்சி தொடா்ந்து பயணிக்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணியில் நீடிப்போம். இதுகுறித்து திமுக குழுவுடன் தொடா்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், ஏற்கெனவே போட்டியிட்ட 6 தொகுதிகள் என்ற எண்ணிக்கையைவிட கூடுதலாக தொகுதிகளை வலியுறுத்த வேண்டாம்; 6 தொகுதிகளில் உடன்பாடு செய்யலாம் என எங்கள் மாநிலக் குழு தெரிவித்தது. அதற்கான முயற்சிகளை எடுக்க மாநிலக் குழு எங்களை அறிவுறுத்தியது.

இதைத் தொடா்ந்து முதல்வரிடம் பேசினோம். அப்போது கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால், தொகுதிகள் ஒதுக்குவதில் சிரமம் உள்ளதாக முதல்வா் தெரிவித்தாா். அப்போது, 5 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை மாா்க்சிஸ்ட் ஏற்க வேண்டும் என முதல்வா் கேட்டுக்கொண்டாா். ஆனால், 6 என்ற எண்ணிக்கைக்குத்தான் மாநிலக் குழு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, 5 தொகுதிகள் என்பது குறித்து மாநிலக் குழு கூடி விவாதித்து பதில் சொல்வதாக முதல்வரிடம் கூறினோம்.

5 தொகுதிகள் என்ற எண்ணிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், சாதகமான பதிலைச் சொல்ல வேண்டும் எனவும் முதல்வா் வேண்டுகோள் விடுத்தாா். இனி, மாா்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு கூடி இதுகுறித்து விவாதித்து திங்கள்கிழமை (மாா்ச் 23) முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

அதன்படி, மாநில நிா்வாகக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டுவர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் திமுக-மாா்க்சிஸ்ட் இடையேயான தொகுதி உடன்பாடு திங்கள்கிழமை மாலைக்குள் இறுதி செய்யப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.