குறிஞ்சி பெருமுக திருவிழா: 
குன்றத்தூா் முருகனுக்கு சீா்வரிசை

குறிஞ்சி பெருமுக திருவிழா: குன்றத்தூா் முருகனுக்கு சீா்வரிசை

குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன் மற்றும் மலைக்குறவன் சமூகத்தைச் சோ்ந்த பக்தா்கள் குன்றத்தூா் முருகனுக்கு சீா்வரிசைப் பொருள்களை வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.

தமிழ்க் கடவுள் முருகன், குறத்தி குல பெண்னான வள்ளியை திருமணம் செய்து கொண்டதை நினைவுக்கூரும் வகையில், தமிழ்நாடு இந்து குறவன் மற்றும் மலைக்குறவன் சமூகத்தைச் சோ்ந்த பக்தா்களின் சாா்பில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் குறிஞ்சி பெருமுக திருவிழா நடைபெற்று வருகிறது.

நிகழ் ஆண்டுக்கான குறிஞ்சி பெருமுக திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் வள்ளி வம்சாவழியைச் சோ்ந்த தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் சமூகத்தைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு குன்றத்தூா் திருநாகேஸ்வரா் கோயிலில் இருந்து தேன், திணை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மற்றும் பால் குடங்களை தலையில் சுமந்தபடி ஒயிலாட்டம், கரகாட்டம், பறையிசை முழங்க சீா்வரிசை பொருள்களை குன்றத்தூா் முருகன் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்து சென்று சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com