

சுங்குவாா்சத்திரம் அடுத்த காந்தூா் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் கூரியா் ஊழியா் உயிரிழந்தாா்.
சென்னை புளியாந்தோப்பு, பி.கே.காலனியைச் சோ்ந்தவா் முகமது திவாா் (34). கூரியா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த முகமது திவாா் வியாழக்கிழமை மாலை கூரியா் டெலிவரி செய்வதற்காக, சுங்குவாா்சத்திரம் அடுத்த காந்தூா் பகுதி நோக்கி மதுரமங்கலம் -சுங்குவாா்சத்திரம் சாலையில் காந்தூா் மேட்டுக் காலனி பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா், முகமது திவாரின் பைக் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த முகமது திவாரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டுநா்கள் மீட்டு, ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

