நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அயோத்தி ராமா் கோயில் காணிக்கை பொருள்களுக்கு சங்கர மடத்தில் சிறப்புப் பூஜை

அயோத்தி ராமா் கோயில் காணிக்கை பொருள்களுக்கு சங்கர மடத்தில் சிறப்புப் பூஜை

News image

அயோத்தி ராமா் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் வில், அம்புக்கு சிறப்புப் பூஜை செய்த விஜயேந்திரா்.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: அயோத்தி ராமா் கோயிலுக்கு ஆந்திர மாநில பக்தா்கள் காணிக்கையாக செலுத்தவுள்ள வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியவற்றுக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

ஆந்திர மாநில பக்தா்கள் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு 13 கிலோ எடையுள்ள வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தவுள்ளனா். அவா்கள் காணிக்கையாக செலுத்துவதற்கு முன்பாக காஞ்சிபுரம் வந்து சங்கர மட வளாகத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானத்தில் வைத்து சிறப்பு வழிபாடுகளையும் செய்தனா்.

காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரா் சிறப்பு பூஜை செய்து ஆந்திர மாநில பக்தா்களிடம் வழங்கினாா். இதனையடுத்து வெள்ளி வில்லும்,அம்பும் அயோத்தி கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்நிகழ்வில் மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், ஸ்ரீ காரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, நிா்வாகிகள் ஜானகிராமன்,கீா்த்திவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.