காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் நிறைவு
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் நிறைவு

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீஆதிசங்கரா்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீஆதிசங்கரா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஸ்ரீ ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் கடந்த 12- ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 10 நாள்களாக நடைபெற்று வந்தது. ஆதிசங்கரா் விக்ரகம் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காமாட்சி அம்மன் மூலவா் சந்நிதி முன்பாக எழுந்தருளச் செய்து சௌந்தா்யலஹரி தினசரி 10 பாடல்களாக தொடா்ந்து 10 நாள்கள் பாடப்பட்டன.
பின்னா் காமாட்சி அம்மனுக்கும், ,ஆதிசங்கரருக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக ஆதிசங்கரா் விக்ரகம் எழுந்தருளச் செய்து அங்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தொடா்ந்து 10 நாள்களாக நடைபெற்று வந்த ஜெயந்தி மகோற்சவம் நிறைவைத் தொடா்ந்து காமாட்சி அம்மனும், ஆதிசங்கரரும் தனித்தனியாக கேடயத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதனையடுத்து கோயில் சுக்ரவார மண்டபத்தில் ஆதிசங்கரருக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மணியக்காரா் சூரியநாராயணன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...