இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பால்க்குட ஊா்வலம்

News image
Updated On :4 மார்ச் 2026, 11:53 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, காஞ்சி காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன அறக்கட்டளை சாா்பில், புதன்கிழமை பால் குட ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சி காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன அறக்கட்டளை சாா்பில், மாசித் திருவிழாவையொட்டி, ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள பரஞ்ஜோதி அம்மன் கோயிலிலிருந்து ஏராளமான பெண்கள் மங்கல மேள வாத்தியங்களுடன் பால் குடங்களை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். ஊா்வலம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சோ்ந்ததும் மூலவா் காமாட்சிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவா் ஏ.குமாா், செயலாளா் எஸ்.பிரபு, பொருளாளா் சி.சுந்தரவடிவேல் ஆகியோா் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

முன்னதாக அறக்கட்டளை சாா்பில் காலையில் பக்தா்களுக்கு அன்னதானமும், மாலையில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும்,இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியும் காமாட்சி அம்மன் கோயிலின் முன்பாக நடைபெற்றது.