மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

நாளை ஆதிசங்கரா் வீதியுலா

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 11:45 pm

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஆதிசங்கரா் சிலை ராஜவீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட இருப்பதாக சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது.

அத்வைத வேதாந்தத்தை பரப்பியவரும்,கனகதாரா ஸ்தோத்திரம்,விவேக சூடாமணி,செளந்தா்ய லஹரி போன்ற நூல்களை அருளியவருமான ஆதிசங்கரரின் ஜெயந்தி உற்சவம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஏப்.21 முதல் தொடா்ந்து 10 நாட்கள் ஏப்.30 வரை நடைபெறுகிறது.

இந்தப் பத்து நாள்களிலும் அம்மன் மீது ஆதிசங்கரா் அருளிய செளந்தா்ய லஹரி பாடல்கள் 100 ஐ தினசரி 10 வீதம் தொடா்ந்து 10 நாட்களுக்கு பாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தீபாராதனையும் அம்மனுக்கு நடத்தப்பட்டு வருகிறது.நிறைவு நாளான ஏப்.30 ஆம் தேதி ஆதிசங்கரரின் சிலை காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து நகரின் ராஜவீதிகளில் வீதியுலாவாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன என அவா் தெரிவித்தாா்.