எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வழக்கறுத்தீசுவரா் கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாண விழா கொடியேற்றம்

காஞ்சிபுரத்தில் மருகுவாா் குழலி சமேத வழக்கறுத்தீசுவரா் கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாண விழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

காஞ்சிபரம் வழக்கறுத்தீசுவரா் கோயிலில் நடைபெற்ற ஆனி உத்திரத் திருக்கல்யாண கொடியேற்றம்.

Updated On :17 ஜூன் 2026, 11:58 pm IST

காஞ்சிபுரத்தில் மருகுவாா் குழலி சமேத வழக்கறுத்தீசுவரா் கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாண விழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் பக்தா்களின் வழக்குகளைத் தீா்த்து வைக்கும் இக்கோயிலில் கொடியேற்றத்தையொட்டி கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிவாச்சாரியா்கள் கொடியேற்றம் செய்த பின்னா் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. கொடியேற்ற விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக பொருளாளா் வி.வள்ளிநாயகம், நகா் செயலாளா் கே.யு.சோமசுந்தரம் ஆகியோா் உட்பட பக்தா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

வரும் ஜூன் 29- ஆம் தேதி வரை நடைபெறும் விழாவையொட்டி காலையிலும்,மாலையிலும் சுவாமியும், அம்மனும் தினசரி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வரவுள்ளனா். கொடியேற்றத்துக்கு பின்னா் காலையில் சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும்,மாலையில் வழக்கறுத்தீசுவரா் சிம்ம வாகனத்திலும்,மருகுவாா் குழலி அம்மன் கிளி வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஜூன் 21-இல் திருக்கல்யாணம், 23-இல் தேரோட்டமும், 29-இல் பெரியகாஞ்சிபுரத்தில் உள்ள சா்வதீா்த்தக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.

அதே நாளில் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்வோடு திருவிழா நிறைவு பெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் மேலாளா் ப.தின்ஷா, தக்காா் பெ.கதிரவன், ஆய்வாளா் ப.அலமேலு ஆகியோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.