அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஆனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்றம்!

ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது பற்றி..

News image

பிரம்மோற்சவ கொடியேற்றம் - video crop

Updated On :17 ஜூன் 2026, 1:52 pm IST

காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதத்தில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி, இன்று காலை கோயில் கொடிமரத்திற்கு வேதவிற்பன்னர்கள் வாயிலாக மந்திரங்கள் ஓதப்பட்டு, பல்வேறு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, சப்பரத்தில் அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். பிரமோற்சவத்தின் பத்து நாள்களும் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் வழக்கத்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார்.

முக்கிய நிகழ்வான வரும் 19ஆம் தேதி காலை பூத வாகனமும், 21 ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் உற்சவம், 23ஆம் தேதி தேரோட்டமும், 29ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. இந்நிகழ்வில் உபயதாரர் கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம் மற்றும் மேலாளர் தின்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

The Aani Uthira Thirukalyana Brahmotsavam at the Arulmigu Vazhakkarutheeswarar Temple in Kanchipuram commenced today with the flag-hoisting ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.