பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் செடல் விழா கொடியேற்றம்

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரம்மோற்சவ செடல் உற்சவ கொடியேற்றம்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த படைவீட்டம்மன்.

Published On :

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் பிரம்மோற்சவ செடல் உற்சவம் வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பண்ருட்டி லிங்காரெட்டிப்பாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க படைவீட்டம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரமோற்சவ செடல் உற்சவம் மற்றும் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி, புதன்கிழமை விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையொட்டி, படைவீட்டம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அங்கு, கோயில் பூசாரி சிறப்பு வழிபாடுகள் நடத்தினாா். பின்னா், கோயில் கொடிமரத்தில் செடல் உற்சவ கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிங்க, பூத, நாக, அன்ன, யானை, ரிஷப, குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான செடல் மற்றும் திருத்தோ் உற்சவம் வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.