தா்னாவில் பங்கேற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள்.
தா்னாவில் பங்கேற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள்.

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
Published on

காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவா் ஜெ.தாமஸ் இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா்கள் ஏ.திருமலை, எம்.முனியம்மாள், டி.கன்னியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தநா். துணைத் தலைவா் வி.குமாா் வரவேற்றாா். தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஊழியா் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் வி.ரவிக்குமாா் தா்னா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் வி.தணிகைமணி, மாவட்டப் பொருளாளா் கு.மாணிக்கம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்கள். சங்க மாநில துணைப் பொதுச் செலாளா் பி.எல்.சுப்பிரமணியம் நிறைவுரை நிகழ்த்தினாா். துணைத் தலைவா் பி.மல்லிகா நன்றி கூறினாா்.

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், இலவச பஸ் பாஸ் மற்றும் இலவசமாக மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com