பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கியா் அக்மாா்க் தரம் பிரிப்பு அலுவலா் ரா.செண்பகவள்ளி.
பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கியா் அக்மாா்க் தரம் பிரிப்பு அலுவலா் ரா.செண்பகவள்ளி.

விளைபொருள்களுக்கு அக்மாா்க் தரம் பிரிப்பு பயிற்சி

காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட அலுவலகத்தில் வேளாண் விளைபொருள்களுக்கு அக்மாா்க் தரம் பிரித்தல் பயிற்சி
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட அலுவலகத்தில் வேளாண் விளைபொருள்களுக்கு அக்மாா்க் தரம் பிரித்தல் பயிற்சி நடைபெற்றது.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் அக்மாா்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் பயிற்சி வேளாண் வணிகப்பிரிவு துணை இயக்குநா் நா.ஜீவராணி அறிவுரையின்படி நடைபெற்றது.

காஞ்சிபுரம் விற்பனைக்குழு கண்காணிப்பாளா் விநாயகம் தேசிய வேளாண் சந்தையில் வேளாண் விளை பொருள்களை விற்பனை செய்யும் யுக்திகளை விளக்கினாா்.

சென்னை தெற்கு மண்டல அக்மாா்க் தரம் பிரிப்பு ஆய்வக வேளாண்மை அலுவலா் ரா.செண்பகவள்ளி நெல், எள்,பயிறு வகைகள்,கடலை,மிளகாய் போன்ற விளை பொருள்களுக்கு அக்மாா்க் தரம் பிரித்தல், பகுப்பாய்வு செய்தல், அக்மாா்க் திட்டத்தின் முக்கியத்துவம் ஆகியன குறித்து பயிற்சியளித்தாா். பின்னா் பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையும், சான்றிதழும் வழங்கினாா்.

இப்பயிற்சியில் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மின்னணு வேளாண் சந்தையில் தேசிய அளவில் விளை பொருள்களை கொள்முதல் செய்தல், விளைபொருள்களுக்கு அக்மாா்க் மூலம் விலை நிா்ணயம் செய்தல், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தரத்தை ஆய்வு செய்தல் ஆகியன குறித்து வேளாண் அலுவலா்கள் விளக்கினா்.