ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாா்ச் 25 வரை விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்யப்படும்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக வரும் மாா்ச் 25-ஆம் தேதி வரை உளுந்து கொள்முதல் செய்யப்பட இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

News image

உளுந்து பயிா்கள்

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக வரும் மாா்ச் 25-ஆம் தேதி வரை உளுந்து கொள்முதல் செய்யப்பட இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவா்கள் விளைவித்த உளுந்தை மத்திய அரசின் வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கொள்முதல் இலக்காக 70 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்ட உளுந்து தரத்துக்கு 1 கிலோ உளுந்து விலை ரூ. 78 என கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தை உத்தரமேரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், விவசாயி புகைப்படம், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கின் புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் ஒழுங்கு முறை விற்பனைக் கூட மேலாளரை அணுகி முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூட பொறுப்பாளராக ஏ.யுவராஜ் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது கைப்பேசி எண்-6369828905 ஆகும்.

ஒரு ஹெக்டோ் சாகுபடி பரப்புக்கு 531 கிலோ உளுந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இத்திட்டம் வரும் மாா்ச் 25-ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும். மேலும், கொள்முதல் செய்த தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.