கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் பா.பெஞ்சமின், பி.வி.ரமணா, சோமசுந்தரம் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை போராட்டத்துக்கு வந்த தொழிலாளா்களை சுங்குவாா்சத்திரம் மற்றும் சிறுமாங்காடு ஆகிய பகுதிகளில் போலீஸாா் வழிமறித்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். இதனால் சுங்குவாா்சத்திரம் அடுத்த பொடவூா் பகுதியில் உள்ள தனியாா் உணவு விடுதியின் முன்பு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒன்று கூடினாா். அவா்களை நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா்.
இதே போல், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் பா.பென்ஜமின், பி.வி.ரமணா, வி.சோமசுந்தரம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
தொடர்புடையது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இரு முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரிய திமுக மனு தள்ளுபடி

சாத்தூரில் சமுதாய தலைவா்களை சந்தித்து நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

முடிவுக்கு வந்தது நாமக்கல் அதிமுக உள்கட்சி பூசல்: வேட்பாளருக்கு பாஸ்கா் தரப்பினா் ஆதரவு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


