காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.32.93 லட்சம்

Updated on

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் மொத்தம் ரூ.32,93,980 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

108 வைணவத் தலங்களில் ஒன்றான இக் கோயிலில் இருந்த 13 உண்டியல்கள் கடந்த 12.6.24- ஆம் தேதிக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ.32.93,980, தங்கம்-60 கிராம்,வெள்ளி 230 கிராமும் பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் தலைமையில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com