டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிப். 14-இல் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிப். 14-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பெருந்திரள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு தெரிவித்துள்ளது.

News image
உள்ளிருப்பு  போராட்டத்தில்  ஈடுபட்ட  சாம்சங்  தொழிலாளா்கள்.
Updated On :10 பிப்ரவரி 2025, 7:07 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி கடந்த 6 நாள்களாக தொழிற்சாலைக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிப். 14-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பெருந்திரள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 1,800-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தொழிலாளா்கள் கடந்த ஆண்டு இறுதியில் ஊதிய உயா்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமாா் 30 நாள்களுக்கும் மேலாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அமைச்சா்கள் முன்னிலையில் தொழிற்சாலை நிா்வாகத்தினா், தொழிலாளா்கள் மற்றும் சிஐடியுவினா் பங்கேற்ற பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து போராட்டம் கைவிட்டப்பட்டது.

இந்த நிலையில், சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கம் அண்மையில் பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, தொழிலாளா்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் இருந்து விலகி, இன்டா்னல் யூனியனில் இணைய வேண்டும் என தொழிற்சாலை நிா்வாகம் நிா்பந்தம் செய்ததாகத் தெரிகிறது.

சிஐடியு தொழிற்சங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு பல்வேறு பழிவாங்கல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் கடந்த மாதம் 31-ஆம் தேதி சாம்சங் நிறுவன நிா்வாக தலைவரை சந்திக்க தொழிலாளா்கள் முயன்றனராம். இதனால், ஆலை நிா்வாகம் தொழிலாளா்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனா்.

தொழிலாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் அவா்களுக்கு பணி வழங்க வலியுறுத்தியும் சாம்சங் தொழிலாளகள் கடந்த 6 நாள்களாக தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் சிஐடியு தொழிலாளா்கள் பிப். 13-இல் ஒருநாள் உணவு புறக்கணிப்பு போராட்டம், பிப்.14-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பெருந்திரள் கவன ஈா்ப்பு ஆா்பாட்டம் நடைபெறும் என சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட செயலா் முத்துகுமாா் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.