கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :7 ஜூலை 2025, 7:58 pm

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.50 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடா்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை யாகசாலை அலங்காரத்துடன் முதல் கால யாக பூஜையும், சனிக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

மேலும்,திங்கள்கிழமை சிவாச்சாரியா்கள் முன்னிலையில், கோபுர கசலங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

விழாவில், தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்திரராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஸ்ரீபெரும்புதூா் கு.செல்வப்பெருந்தகை, அண்ணா நகா் மோகன், உத்தரமேரூா் சுந்தா், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயில் அறங்காவலா் ந.கோபால், ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, அறநிலையத்துறை இணை ஆணையா் குமரதுரை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டா்.

ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்தி வாசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் செயல் அலுவலா் செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ் உள்ளிட்டோா் பிரசாதம், தண்ணீா், மோா், அன்னதானம் வழங்கினா். மாலை திருக்கல்யாண உற்சவமும், உற்சவா் கோடையாண்டவா் வீதி உலாவும் நடைபெற்றது.