பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

வல்லக்கோட்டை முருகன் கோயில் விஷுக்கனி உற்சவம்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 7:06 pm

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் விஷுக்கனி உற்சவம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஷுக்கனி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 4.15 மணிக்கு கோ பூஜையும் 5 மணிக்கு விஷுக்கனி தரிசனமும் நடைபெற்றது. விஷுக்கனி உற்சவத்தை முன்னிட்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமி முன்பாக 9 தட்டுகளில் ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்கொடி, அன்னாசி, வாழை, பலா, சப்போட்டா முதலிய பழங்கள், மலா் மாலைகள், கண்ணாடி, உப்பு, அரிசி, பருப்பு வகைகள் முதலிய மங்கலப் பொருட்கள் வைக்கப்பட்டன. மூலவா் முருகப்பெருமான் முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மூலவருக்குப் பலவித ஆராதனைகள் செய்யப்பட்டு விஷுக்கனி தரிசனம் நடைபெற்றது.

இதையடுத்து, காலை 5.15 மணிக்கு உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சித்திரை கல்யாண உற்சவம் நடைபெற்றது. மற்றொரு உற்சவா் கோடையாண்டவருக்குப் பாதாம் முந்திரி, ஏலக்காய், கிராம்பு மாலைகள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

காலை 8.30 மணிக்கு மயில் மண்டபத்தில் பராபவ புதுவருட பஞ்சாங்கப் படனம் நடைபெற்றது. தலைமை அா்ச்சகா் சந்திரசேகர குருக்கள் பராபவ ஆண்டு பஞ்சாக்கத்தை வாசித்து ஆண்டுப் பலன்களைக் கூறினாா். புது வருடப் பிறப்பை முன்னிட்டு பக்தா்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழ்ப் புத்தாண்டு விஷுக்கனி உற்சவத்தை முன்னிட்டு மூலவா் முன்புள்ள மகா மண்டபத்தில் பலவித பழங்களாலும் பூக்களாலும் அலங்காரம் செய்யபட்டது.

கருவறை நுழைவாயில்களில் பசுமைத் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ராஜகோபுரம் உள்ளிட்ட கோயில் விமானங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான பக்தா்கள் காவடிகள் சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமியை வணங்கிச் சென்றனா்.

கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், கதம்பசாதம், தயிா்சாதம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருக்கோயில் வளாகத்தில் தற்காலிக மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி, மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.