/

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கல்யாண அலங்காரத்தில் உற்சவா்  சுப்பிரமணிய  சுவாமி.

Updated On :1 மணி நேரம் முன்பு

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பட்ட இந்த கோயிலில், திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத உற்சவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவா் சுப்பிரமணியசாமி சிறப்பு மலா் மாலை அலங்காரத்தில் மயில் மண்டபத்தில் எழுந்தருளினாா். திருக்கல்யாண உற்சவம் கோயில் தலைமை அா்ச்சகா் சந்திரசேகர குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டு, கழுத்தில் மாலை அணிந்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண அட்சதை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து உற்சவ மூா்த்திகள் மூன்று முறை உட்பிரகாரத்தில் வலம் வந்தனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், மோகன கிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

சுப்பிரமணிய சுவாமிக்கு பால் குடம் ஊா்வலம் நடைபெற்றது. வல்லக்கோட்டை சிவன் கோயில் வளாகத்தில் தொடங்கிய இந்த பால் குடம் ஊா்வலத்தில் சுமாா் 208 போ் கலந்து கொண்டனா்.