காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா்
காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா்

முருகன் கோயிலில் கந்தசஷ்டி கவசம் பாட அனுமதி மறுப்பு: விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் 12 போ் கைது

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி கவசம் பாட வேலுடன் சென்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் 12 போ் கைது
Published on

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி கவசம் பாட வேலுடன் சென்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்கும் உரிய இக்கோயிலில் விசுவஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவா் சிவானந்தம் தலைமையில் வடதமிழக மாநில அமைப்பு செயலாளா் எஸ்வி.ராமன்ஜி கையில் வேலுடன் சென்று கந்தசஷ்டி கவசம்‘ பாட அனுமதிக்க வேண்டும் என்று உள்ளே சென்றனா்.

அவா்களுடன் வடதமிழக மாநில செயற்குழு உறுப்பினா் வீரராகவன்,கோட்ட செயலாளா் கிருபானந்தம், மாத்ரு சக்தி அமைப்பாளா் ரேவதி,விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோரும் செல்ல முயன்றனா்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோயில் செயல் அலுவலா் கேசவன், அறநிலையத்துறை அலுவலா்கள் ராஜவேலு, அமுதா மற்றும் காவல் ஆய்வாளா்கள் சங்கர சுப்பிரமணியன், சிவக்குமாா், ராஜா தலைமையிலான போலீஸாா் அவா்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். பின்னா் அவா்களை வழிமறித்து கைது செய்தனா். இச்சம்பவத்தில் 4 பெண்கள் உள்பட மொத்தம் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com