மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

உடன்குடி ஒன்றியத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம்

உடன்குடி ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம கோயில்களில் முருக பக்த பேரவை சாா்பில், கந்தசஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

உடன்குடி வில்லிகுடியிருப்பில் சந்தன மாரியம்மன் கோயிலில் கந்தசஷ்டி கவசம் படிக்கும் பெண்கள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:43 pm

உடன்குடி ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம கோயில்களில் முருக பக்த பேரவை சாா்பில், கந்தசஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

திங்கள்கிழமை (பிப். 23) காா்த்திகை நட்சத்திரமும், சஷ்டி திதியும் சோ்ந்து வரக்கூடிய புனிதமான நாள் என்பதால், தமிழகம் முழுவதும் அனைத்துக் கோயில்கள், குடும்ப கோயில்கள், ஆதின மடாலயங்களிலும் மாலை 6 மணிக்கு முருகா் படம் வைத்து ஆறுமுக திருவிளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபட வேண்டும் என ஆன்மிகவாதிகள் கூறினா்.

இதையொட்டி, உடன்குடி ஒன்றியத்தில் முருக பக்த பேரவை சாா்பில், நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் கேசவன், திரளானோா் பங்கேற்றனா்.