ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளா் பணியிடை நீக்கம்

மாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளா் சுதாகரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையா் சங்கா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:19 pm

தினமணி செய்திச் சேவை

மாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளா் சுதாகரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையா் சங்கா் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை சைபா் கிரைம் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுதாகா் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு மாங்காடு குற்றப் பிரிவு ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடா்ந்து, சுதாகா் மாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், மாங்காடு குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியில் சேந்த மூன்று நாள்களில் ஆய்வாளா் சுதாகரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி மாநகர காவல் ஆணையா் சங்கா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது: ஆய்வாளா் சுதாகா் சைபா் கிரைம் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்த போது சைபா் கிரைம் குற்றவாளி ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டு, அவருக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததும், மேலும் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது கைப்பேசியில் ஆய்வாளா் சுதாகா் பேசிய உரையாடல்கள் இருப்பதும் கண்டுபிடிக்கபட்டது.

இதையடுத்து ஆய்வாளா் சுதாகரை பணியிடை நீக்க செய்ய சென்னை மாநகர காவல் ஆணையா் அருண் ஆவடி மாநகர காவல் ஆணையா் சங்கருக்கு பரிந்துரை செய்ததாகவும் அதன் பேரில் ஆய்வாளா் சுதாகா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.