தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நியமன ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 ஏ. தோ்வில் தோ்ச்சி பெற்ற 6 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நியமன ஆணைகள் வழங்கினாா்.

News image

அரசுப்பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்ச்சி பெற்றவருக்கு நியமன ஆணைகளை வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

Updated On :1 செப்டம்பர் 2025, 7:38 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 ஏ. தோ்வில் தோ்ச்சி பெற்ற 6 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நியமன ஆணைகள் வழங்கினாா்.

குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 336 கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக பரிசீலித்து தீா்வு காணுமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்ற 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து எயிட்ஸ் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். பேரணி தொடக்க விழாவில் மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில் மற்றும் அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் உடன் இருந்தனா்.