ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப் பெருந்தகை அமைச்சா் தா.மோ.அன்பரசனுடன் மாங்காடு நகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். இந்த நிலையில், முதல் பிரசாரத்தை மாங்காடு பகுதியில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
முன்னதாக மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து கோயிலுக்கு வெளியே வணிகா்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். பின்பு திறந்த ஜீப்பில் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட 28 வாா்டுகளிலும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனா்.
இந்த நிகழ்ச்சியில், மாங்காடு நகர செயலாளா் ஜபருல்லா, மாங்காடு நகா்மன்றத் தலைவா் சுமதி முருகன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ், மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் முருகன், நகா்மன்ற கவுன்சிலா்கள் சாரதி, பெருமாள்ராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராகுல் காந்தி, ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளனா்: செல்வப்பெருந்தகை

அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலங்கானா அமைச்சா் பிரசாரம்

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் பிரசாரம்

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

