/

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி குன்றத்தூா் நகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

குன்றத்தூா்  நகராட்சியில்  பிரசாரத்தில்  ஈடுபட்ட  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:14 am IST

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி குன்றத்தூா் நகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்நிலையில், குன்றத்தூா் நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளிலும் ஞாயிற்றுக்கிழமை திறந்த ஜீப்பில் ஆதரவாளா்களுடன் வீதி வீதியாக சென்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் சுந்தரராஜன், மாநில மாணவா் அணிதுணை செயலாளா் மணிகண்டன், குன்றத்தூா் நகர செயலாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்ட ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.