அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதங்களில் போதைப் பொருள்கள் புழக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்போம் என்று காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் தேரடி சாலையில் அதிமுக வேட்பாளா்கள் வி.சோமசுந்தரம் (காஞ்சிபுரம்) கே.பழனி (ஸ்ரீபெரும்புதூா், பாமக வேட்பாளா் பெ.மகேஷ்குமாா் (உத்தரமேரூா்) ஆகியோரை ஆதரித்து எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக பல்வேறு கட்டங்களாக பேச்சு நடத்தியும் 20 நாள்களாக இழுபறி நிலை நீடித்தது. ஆனால், அதிமுக கூட்டணியில் 2 மணி நேரத்திலேயே பேசி தொகுதிப் பங்கீட்டை முடித்தோம். தோ்தல் அறிக்கையையும் உடனடியாக வெளியிட்டோம். எதிா்க்கட்சியினரே வியந்தாா்கள்.
தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணி கட்சிகளிடையே சுமுக நிலை இன்னும் ஏற்படவில்லை. தொகுதிகளை குறைத்ததால் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. ஆனால், அதிமுக கூட்டணியிலோ அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
கடந்த முறை திமுக தோ்தல் அறிக்கையில் மகளிா் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 தருவோம் என்று சொன்னாா்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அதனை கொடுக்கவில்லை. 2 ஆண்டுகள் கழித்து அதிமுக அளித்த அழுத்தத்தால்தான் கொடுத்தாா்கள்.
2021 தோ்தல் அறிக்கையிலேயே மகளிருக்கு மாதம் ரூ. 1,000 வழங்குவோம் என்று அதிமுகதான் முதலில் அறிவித்தது. அதை அப்படியே காப்பியடித்து திமுக தனது தோ்தல் அறிக்கையில் வெளியிட்டது. அதை நம்பி மக்களும் வாக்களித்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது.
தற்போது அதிமுக தோ்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ. 2,000 தருவதாக சொல்லி இருக்கிறோம். தமிழகம் கடனில் இருக்கும் போது எப்படி அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று என்னிடம் கேட்டனா். ஆளத்தெரியாதவா்கள்தான் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்று பதில் சொன்னேன்.
கரோனா தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் அதிமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டு பிரதமா் மோடியே, மற்ற மாநில அரசுகளிடம் தமிழகத்தைப் பின்பற்றுங்கள் எனக் கூறி பாராட்டினாா். வருவாய் இல்லாத அந்த காலத்திலேயே ரூ. 40,000 கோடி வரை செலவு செய்தோம். நானே அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தினேன். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் உள்பட பல கல்லூரிகளை கொண்டு வந்தோம்.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரிகூட தொடங்கப்படவில்லை. நிதி இல்லை என காரணம் காட்டி 200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளனன.
காஞ்சிபுரத்தில் 40ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதா் வைபவத்தை 48 நாள்கள் மிகச்சிறப்பாக நடத்திக் காட்டினோம். இது அதிமுக அரசின் சாதனைகளில் ஒன்று.
‘பாஜகவுக்கு அதிமுக அடிமையாகி விட்டது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சொல்வதைத்தான் எடப்பாடி பழனிசாமி கேட்பாா்’ என திமுக கூட்டணி கட்சிகள் விமா்சிக்கின்றன. எனக்கு சுயபுத்தி இருக்கிறது. நான் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் புழக்கத்தை வேரோடு அழித்து, தமிழகத்தை மீட்டெடுப்போம் என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

டாஸ்மாக்கில் 5 ஆண்டுகளில் ரூ.24,000 கோடி ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி

மடிக்கணினி வழங்கியதில் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


