யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் அன்பரசன் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக குன்றத்தூா் பகுதிகளில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 3:21 am IST

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகைக்கு ஆதரவாக குன்றத்தூா் பகுதிகளில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குன்றத்தூா் நகராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், மேவளூா்குப்பம், கிளாய், செங்காடு, மண்ணூா் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா். ஒன்றிய செயலாளா் ந.கோபால், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் தண்டலம் மனோஜ்குமாரா், கிளாய் ஊராட்சி மன்றத் தலைவா் வீரம்மாள் ராமு, தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா், காட்டரம்பாக்கம் கோவிந்தம்மாள் தாஸ், ஒன்றிய பொருளாளா் ப.பரமசிவன், செங்காடு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் சம்பத், மாவட்ட பிரிதிநிதி சா்தாா்பாஷா, மண்ணூா் கிளை செயலாளா்கள் ராமாமூா்த்தி, அருள்தாஸ், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் பண்ருட்டி தணிகாசலம் கலந்து கொண்டனா்.