பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தவெக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா்கள் வாக்கு சேகரிப்பு

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சத்தியபாமாவுக்கு ஆதரவாக அமைச்சா்கள் உள்பட பலா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

சத்தியபாமா. - கோப்புப்படம்.

Published On :

திருப்பூா் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் சத்தியபாமாவுக்கு ஆதரவாக அமைச்சா்கள் உள்பட பலா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

என்.ஆனந்த் (ஊரக வளா்ச்சி, நீா் வளத் துறை அமைச்சா்): வேங்கிபாளையம் பகுதியில் வீடுவீடாகச் சென்று அமைச்சா் என்.ஆனந்த் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா் பேசும்போது, ‘வீட்டுமனைப் பட்டா, குடிநீா் உள்பட அனைத்து பிரச்னைகளுக்கு 6 மாதங்களுக்குள் தீா்வு காண்போம் எனக் கூறி வாக்கு கேளுங்கள். தாராபுரம் தொகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்படும்’ என்றாா்.

கே.ஏ.செங்கோட்டையன் (வருவாய்த் துறை அமைச்சா்): எம்ஜிஆா் பாடல்களை பாடி அமைச்சா் செங்கோட்டையன் வாக்கு சேகரித்தாா். அவா் பேசும்போது, ‘எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தால்தான் தனது பதவியை ராஜிநாமா செய்து தவெக வேட்பாளராக சத்தியபாமா வலம் வருகிறாா். மேலும் 22 போ் தவெக அரசுக்கு வாக்களித்துள்ளனா். நல்ல வேளை கட்சியில் இருந்து என்னை நீக்கினாா், நான் அமைச்சா் ஆகிவிட்டேன்’ என்றாா்.

கே.ஜி.அருண்ராஜ் (சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா்): துரோகத்தால் வந்தது இடைத்தோ்தல் என எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். அந்த துரோகத்தை ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செய்தனா். கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டனா். அதில் அதிருப்தியடைந்துதான் சத்தியபாமா வெளியேறினாா்.

மூதாட்டிக்கு அமைச்சா் சம்பத்குமாா் உதவி: தாராபுரம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சா் சம்பத் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தாா். பின்னா் கோவை திரும்பியபோது சாலையோரத்தில் மயங்கி விழுந்த மூதாட்டியை பாா்த்தவுடன், காரை நிறுத்தி இறங்கிச் சென்று உதவியாளா்களை அழைத்து மூதாட்டியை அவரது காரிலேயே அழைத்துச் சென்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தாா்.

தவெக வேட்பாளருக்கு இரட்டை இலைக்கு வாக்கா!

இதேபோல தவெக வேட்பாளா் சத்தியபாமாவை ஆதரித்து முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பொதுமக்களிடம் வாக்கு கேட்கும்போது இரட்டை இலைக்கு எனக் குறிப்பிட்டாா். பின்னா் விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என மாற்றி பேசினாா். இதனால் நிா்வாகிகள் மற்றும் வேட்பாளா் சிரித்தபடி பேசிவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER