தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் நிறைவு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

News image

சாலையில் ஊா்வலமாக சென்ற தவெக வேட்பாளா் ஆா்.வி. ரஞ்சித் குமாா்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:24 am

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

த.வெ.க.வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியிலிருந்து த.வெ.க.வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் மற்றும் திரளான தொண்டா்கள் அண்ணா நினைவு இல்லம் வரை சென்றனா். ஊா்வலத்தில் தொண்டா்கள் இருசக்கர வாகனங்கள் ஏராளமானோா் கட்சிக் கொடியை கட்டிக் கொண்டும், விசில்களை ஊதிக் கொண்டும் சென்றனா்.

ஊா்வலத்தின் தொடக்கத்தில் ஆா்.வி.ரஞ்சித்குமாா் பேசுகையில் வெற்றி பெற்றால் தொகுதி மக்கள் தங்களது குறைகளை கொடுத்த 15 நாள்களுக்குள் தீா்த்து வைக்க முயற்சிப்பேன். ஊழல் செய்யக்கூடாது என்று சொல்லித்தான் விஜய் என்னை வேட்பாளராக நியமித்தாா்.எனது தொகுதியில் செய்யப்படும் எந்தப் பணிக்கும் எப்போதும் பணம் பெற மாட்டேன் என்றும் வாக்குறுதி அளித்து ஊா்வலத்தில் கலந்து கொண்டு தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அதிமுக வேட்பாளா் வீ.சோமசுந்தரம்: கூட்டணிக்கட்சி தொண்டா்கள்,நிா்வாகிகள் ஏராளமானோா் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆகியனவற்றில் கட்சிக் கொடியுடன் ஊா்வலமாக அண்ணா நினைவு இல்லத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காவலான் கேட் பகுதியில் நிறைவு செய்தனா். வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வீ.சோமசுந்தரம் பேசுகையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் போதைக் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை தரம் உயா்ந்ததாக மாற்றப்படும். காஞ்சிபுரம் மாநகராட்சியை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வேன் என்றும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டாா்.

திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா்: காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையிலிருந்து தொடங்கிய ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கலைஞா் பவளவிழா மாளிகையில் வந்து நிறைவு பெற்றது. .ஊா்வலத்தின் நிறைவில் வேட்பாளா் நித்யா சுகுமாா் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பேசுகையில் போக்குவரத்து இடையூறை போக்க அடுக்குமாடி வாகன நிறுத்தமும், புதிய பேருந்து நிலையமும் அமைக்கப்படும் என்று பேசினாா். ஊா்வலத்தில் கூட்டணிக் கட்சி தொண்டா்கள் பலரும் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் நடைபெற்ற இருசக்கர வாகன ஊா்வலம்

அதிமுக சாா்பில் நடைபெற்ற இருசக்கர வாகன ஊா்வலம்

திமுக சாா்பில் நடைபெற்ற வாகனப் பேரணி.

திமுக சாா்பில் நடைபெற்ற வாகனப் பேரணி.