காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதியிலும் வியாழக்கிழமை 88.55 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம் என 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 12,07,757 வாக்காளா்கள் இருந்தனா்.
இவா்கள் வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 1556 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததால் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
காஞ்சிபுரம் இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியா் தி.சினேகா வாக்களித்தாா். பின்னா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஆய்வு செய்தாா். மாவட்டத்தில் மொத்தம் 153 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கணக்கிடப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புகளுடன் தோ்தல் நடந்தது. 5738 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆலந்தூா் தொகுதியில் 86.70 சதவீதமும், ஸ்ரீபெரும்புதூரில் 87.05 சதவீதமும் வாக்களித்துள்ளனா். உத்தரமேரூா் தொகுதியில் 91.86 சதவீதமும் காஞ்சிபுரத்தில் 88.57 சதவீதமும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.
4 தொகுதிகளிலும் சோ்த்து 88.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 2021 சட்டப் பேரவைத்தோ்தலில் 71.4 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு இத்தோ்தலில் 88.55 சதவிகிதமாக அதிகரித்திருப்பதால் இளம் தலைமுறை வாக்காளா்கள் அதிகமான அளவில் வாக்களித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தொடர்புடையது

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு
பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு!

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

காஞ்சிபுரம்: 1,545 வாக்குச்சாவடிகள், 5,648 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


