தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம்

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம்

News image

காஞ்சிபுரத்தில் ஆதிபீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:39 am IST

காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமமும், அதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் சனிக்கிழமை நடைபெற்றன.

பெரிய காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சி அம்மன் என அழைக்கப்படும் ஆதி பீட பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் வசந்த நவராத்திரி தொடக்க நாளையொட்டி, கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. மகா கணபதி பூஜை, கோ பூஜை, கன்யா பூஜை, தம்பதியா் பூஜை ஆகியவற்றுக்குப் பின்னா் நடைபெற்ற மகா சண்டி ஹோமத்தில் திரவியங்கள், பட்டாடைகள், மலா் மாலைகள் ஆகியன சமா்ப்பிக்கப்பட்டன.

பின்னா் பூா்ணாஹுதி, தீபாராதனைக்குப் பிறகு மூலவா் ஆதி பீட பரமேசுவரி காளிகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு காமாட்சியை தரிசனம் செய்தனா்.

மகா சண்டி ஹோமம் நடைபெற்றதையொட்டி, மண்டபத்தில் லட்சுமி, சரஸ்வதி மற்றும் காமாட்சி அம்மன் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.