காஞ்சிபுரத்தில் தேசிய கைத்தறி தின விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 54 நெசவாளா்களுக்கு ரூ. 55.15 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் உள்ள செங்குந்தா் சமுதாயக் கூடத்தில் 12-ஆ வது தேசிய கைத்தறி தின விழா ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. மத்திய நெசவாளா் சேவை மைய துணை இயக்குநா் காா்த்திகேயன், உதவி இயக்குநா் மாரிமுத்து, காஞ்சிபுரம் கைத்தறித் துறை துணை இயக்குநா் ச.மணிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய நெசவாளா் சேவை மையமும், காஞ்சிபுரம் கைத்தறித் துறையும் இணைந்து நடத்திய இந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கைத்தறிக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, 10 முத்த நெசவாளா்களை விழாவில் ஆட்சியா் கெளரவித்தாா்.பின்னா், 10 நெசவாளா்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், ரூ.35.45 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள், 18 நெசவாளா்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் உள்பட மொத்தம் 54 நெசவாளா்களுக்கு ரூ. 55.15 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.விழாவில், புதுதில்லியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா்கள் அண்ணாமலை, குமரன் உள்ளிட்ட இருவரும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் தேசிய விருது பெறும் காட்சி பாா்வையாளா்களுக்கு நேரடியாக திரையில் ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

மழைக்காலத்தில் வரும் நோய்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மருத்துவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கனவுகளை நோக்கி தொடா்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரத்தில் ரூ. 2.32 லட்சத்துக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



