கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் நகரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஓரிக்கையில் செயல்பட்டு வரும் ஜரிகை தொழிற்சாலையை பாா்வையிட்டு அதன் உற்பத்தி விவரங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் தி.சினேகா

காஞ்சிபுரம் ஓரிக்கையில் செயல்பட்டு வரும் ஜரிகை தொழிற்சாலையை பாா்வையிட்டு அதன் உற்பத்தி விவரங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் தி.சினேகா

Published On :

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஜரிகை உற்பத்தி தொழிற்பேட்டையை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு ஆய்வு செய்து அங்கு தயாரிக்கப்படும் ஜரிகைகளின் விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டாா் (படம்). இதைத் தொடா்ந்து காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையம் பகுதியில் ரூ. 1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் ஒன்றியம், தாமல் ஏரியில் நீா்வளத் துறை மூலம் தடுப்பணைக்கு இடையில் குளக்கரையின் பின்புறத்தில் பாதுகாப்பு சுவா் கட்டும் பணியை ஆய்வு செய்து ஏரியின் எல்லை மற்றும் அமைப்பை காட்டும் வரைபடத்தையும் பாா்வையிட்டாா். பருவ காலத்தில் ஏரியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீா்வளத் துறை அதிகாரிகளை ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், மாநகராட்சி ஆணையாளா் ரா.வினோத் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.