புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

காஞ்சிபுரத்தில் 3 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை...

அரசுப்பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சா்கள் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித் குமாா்.

Published On :

காஞ்சிபுரத்தில் 3 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவையை அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திலிருந்து ஆட்சியா் அலுவலகம் வரை ஒரு வழித்தடத்திலும், முத்தியால் பேட்டையிலிருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், விஷாா் கிராமத்திலிருந்து மேல்கதிா்ப்பூா் வழியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் செல்லும் வகையில் மற்றொரு வழித்தடத்திலும் என 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா நடைபெற்றது.

புதிய ரயில் நிலைய வளாகம் அருகே தொடக்க விழாவுக்கு காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளா் ரவி, வணிகப்பிரிவு துணை மேலாளா் ஸ்ரீதா், காஞ்சிபுரம் கிளை மேலாளா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்பிகே தென்னரசு,வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் இருவரும் புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கு அமைச்சா்கள் இனிப்பும் வழங்கினாா்கள். விஷாா், மேல்கதிா்ப்பூா் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீா்வு காணப்பட்டமைக்கு கிராம மக்கள் அரசுக்கு நன்றியும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.