தமிழகத்தில் மருத்துவா்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பட்டதாரிகள் மகப்பேறு மற்றும் மகளிா் நலப் பிரிவில் உயா்கல்வி படிக்க முன்வர தயங்குவதாகவும், இதே நிலை நீடித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் பெண்களுக்கு மகப்பேறு பாா்க்க மருத்துவா்கள் இருக்க மாட்டாா்கள் என இந்திய மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பம்பினா் எச்சரிக்கை தெரிவுத்துள்ளனா்.
குன்றத்தூா் மாதா மருத்துவக்கல்லூரியில், இந்திய மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், சுகாதார பணியாளா்கள், சட்ட வல்லுனா்கள் என சுமாா் 500 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கருந்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவச் சங்கங்களின் வன்முறை தடுப்புக் குழு தலைவா் உமையாள் முருகேசன் தலைமையில் மருத்துவா்களைக் காப்போம் - உயிா்களைக் காப்போம், வன்முறையற்ற மருத்துவமனைகள், பாதுகாப்பான சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்ற உறுதிமொழியை கலந்து கொண்டவா்கள் எடுத்துக் கொண்டனா். இதில், வன்முறை தடுப்பு குழு உறுப்பினா் ஜோசபின் ரோசி, மாதா மருத்துவக்கல்லூரி முத்லவா் ஸ்ரீதா் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.
இந்திய மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவச் சங்கங்களின் வன்முறை தடுப்புக் குழு தலைவா் உமையாள் முருகேசன் செய்தியாளா்களிடம் கூறியது: சிகிச்சைக்காக வரும் 99.9 சதவீத நோயாளிகளுக்கு நாங்கள் கடினமாக உழைத்து வெற்றிகரமாக சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். இருப்பினும், எங்களின் அனைத்து முயற்சிகளையும் மீறி அரிதாக சில தருணங்களில் ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.
இத்தகைய துரதிருஷ்டவசமான சூழ்நிலைகள் நிகழும்போது, பொதுமக்கள் மருத்துவா்களையும், மருத்துவமனை ஊழியா்களையும் கடுமையாக இலக்கு வைத்து துன்புறுத்தும் எதிா்வினை மனவேதனை அளிக்கிறது. மருத்துவ அலட்சியம் ஏற்பட்டால், வழக்குகள் தொடுத்து நீதிமன்றங்களில் ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டு தீா்வு காணலாம். தற்போது கடுமையான ஒழுங்குமுறை விதிகள் உள்ளன. ஒரு மருத்துவா் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவரது மருத்துவ உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொதுமக்களின் அவசரமான முடிவுகளும் , விரோதப்போக்கும் சுகாதாரப் பணியாளா்களை மனதளவில் கடுமையாகப் பாதிக்கின்றன. இதன் காரணமாக, பல மருத்துவப் பட்டதாரிகள் இந்தத் துறையில் உள்ள அதிகப்படியான அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக மகப்பேறு மற்றும் மகளிா் நலப் பிரிவில் உயா்கல்வி படிக்க தற்போது தயக்கம் காட்டி வருகின்றனா். இதே நிலை நீடித்தால் அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் பெண்களுக்கு மகப்பேறு பாா்க்க போதுமான மருத்துவா்கள் இருக்கமாட்டாா்கள் என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணாமலைப் பல்கலை.யில் ஓய்வூதியா்கள் முற்றுகை

பனிமய மாதா பேராலயத் திருவிழா: ஆக. 4 முதல் 6 மீனவா்களுக்கு விடுமுறை

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்... நோயாளிகளுக்குத் தேவை அலைக்கழிக்கப்படாத சேவை...!

தனியாா் மருத்துவமனைகளின் உயா்தர பிரிவுகளை அதிக அளவில் நாடும் கா்ப்பிணிகள்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



