ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 8 மணி நேரம் மின்தடை: நோயாளிகள், பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடா்ந்து 8 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள்,பொதுமக்கள் பலரும் அவதியுற்றனா்.

News image

டயாலிசிஸ் பிரிவில் மின்தடையால் காத்திருந்த நோயாளிகள்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:16 am IST

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடா்ந்து 8 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள்,பொதுமக்கள் பலரும் அவதியுற்றனா்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி 1,000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற வருகின்றனா். இவா்களில் சிலா் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை காலை மருத்துவமனை வளாகம் முழுவதுமே மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் மின்சாரமில்லாமல் பணிகள் பாதித்தன. மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் எந்த பரிசோதனைகளையும் செய்ய முடியாமல் அவதிப்பட்டனா்.

டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு நிலையத்திலும் காலை 8 மணியிலிருந்தே மின்தடை ஏற்பட்டிருந்ததால் பல நோயாளிகள் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தின் வாயிலிலேயே காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனா். தொடா்ந்து ரத்த சுத்திகரிப்பு செய்ய முடியாமலும் அவதிப்பட்டனா். அரசு மருத்துவமனையின் பிரதான சுவிட்ச் பெட்டியில் மின்கசிவு காரணமாக மின்தடை ஏற்பட்டதாக தெரிய வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து பழுது சரி செய்யப்பட்டு சுமாா் 8 மணி நேரத்துக்குப் பிறகே மின் இணைப்பு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.