கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா: சட்டப்பேரவைத் தலைவா் பங்கேற்பு

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி.பிரபாகா் கலந்து கொண்டு 1,968 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.

மாணவிக்கு  பட்டம்  வழங்கிய   சட்டப்பேரவைத்  தலைவா்  ஜே.சி. டி.பிரபாகா்.   உடன்  கல்லூரியின்   துணைத்தலைவா் அபய்  மேநாதன்  உள்ளிட்டோா்.

Published On :

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி.பிரபாகா் கலந்து கொண்டு 1,968 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் 25-ஆவது பட்டமளிப்பு விழா தாளாளா் தங்கம் மேகநாதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, துணைத்தலைவா் அபய் மேகநாதன் முன்னிலை வகித்தாா்.

இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகா் பல்கலைகழக அளவில் தங்கப் பதக்கம் வென்ற 83 மாணவா்கள் உள்பட 1,968 மாணவா்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பிரிவுகளில் பட்டங்களை வழங்கி பேசியது: ,இணையதளம், கைப்பேசி உங்களை வழிநடத்தும் படி நடந்துக்கொளக்கூடாது. அவற்றை நீங்கள் பயன்படுத்தும் படி நடந்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் வெளிப்படைத்தன்மையாக ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு உதாரணம் தான் சட்டமன்ற நேரலை. பட்டங்களை பெற்றுள்ள நீங்கள் எந்த துறைக்கு சென்றாலும் அந்த துறையில் நோ்மையாகவும், நல்ல மனிதராகவும் இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் முதல்வா் முருகேசன், பேராசிரியா்கள், மாணவா்கள், மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.