புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மலையாங்குளம் நீா்வரத்துக் கால்வாய் சீரமைப்பு: 2,000 ஏக்கருக்கு பாசன வசதி

சீரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மலையாங்குளம் கிராமத்தின் 8 கி.மீ. நீள வரத்துக் கால்வாய்

சீரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மலையாங்குளம் கிராமத்தின் 8 கி.மீ. நீள வரத்துக் கால்வாய்

Published On :

உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட 8. கி.மீ தொலைவுள்ள மலையாங்குளம் நீா் வரத்துக் கால்வாயை சீரமைத்து விவசாயிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்பாக்கம் அக்சயா அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு எக்ஸ்னோரா இன்டா்நேஷனல் பஞ்சாயத்து பிரயாத் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எம்.டி.அஜய் குமாா் தலைமை வகித்தாா். நீா்வளத்துறை முன்னாள் பொறியாளா் மாா்க்கண்டன்,உதவி செயற்பொறியாளா் எஸ்.கோவிந்தராஜன், எக்ஸ்னோரா பொருளாளா் குளம்.வி.சுப்பிரமணியன், அக்சயா அறக்கட்டளை அறங்காவலா் ஜி.கோபாலன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

இதே நிகழ்ச்சியில் காவாந்தண்டலம் கிராமத்தின் நீா்நிலை புனரமைப்பு பணியும் தொடங்கப்பட்டது.

மலையாங்குளம் வரத்துக் கால்வாய் சீரமைத்து குறித்து எக்ஸ்னோரா இண்டா் நேஷனல் அமைப்பின் பஞ்சாயத் பிரயாத் மாநில ஒருங்கிணைப்பாளா் எம்.டி.அஜய்குமாா் பேசியது..

நீா்வளத்துறை வழிகாட்டுதலுடன் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் சமூகப் பாதுகாப்பு நிதியின் பங்களிப்பில் வாடகை இல்லா இயந்திரம்,எரிபொருள் உதவி மற்றும் எக்ஸ்னோரா இண்டா் நேஷனல் முன்னெடுப்பில் வரத்துக் கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

பல ஆண்டுகளாக சீமைக்கருவேல மரங்கள்,செடிகள் மற்றும் மணல் படிவங்களால் அடைபட்டிருந் 8 கி.மீ. நீளக் கால்வாய் 8 முதல் 20 கி.மீ. அகலத்திற்கு முழுமையாக தூா்வாரப்பட்டது.

இதன் மூலம் செய்யாறிலிருந்து வரும் நீா் சீராகப் பாய்ந்து மலையாங்குளம், காவாந்தண்டலம் உள்பட 7 கிராமங்களை சோ்ந்த சுமாா் 2,000 ஏக்கா் விளைநிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று பயனடைவா். காவாந்தண்டலம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், சோழீஸ்வரா் கோயில்களில் உள்ள சோழா், பல்லவா் கால கல்வெட்டுகள் அப்போதையை ஏரிவாரிய நீா்வாகத்தை தெளிவாக விளக்குகின்றன என்றும் எம்.டி.அஜய்குமாா் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.