நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்புக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்ட அளவிலான இயக்க மறு சீரமைப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய  காஞ்சிபுரம்  மாவட்ட மறுசீரமைப்பு  இயக்க  பொறுப்பாளா்  டிடிகே.சித்திக்.

Published On :

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்ட அளவிலான இயக்க மறு சீரமைப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் நியமினம் செய்யப்பட்டுள்ளனா். மாவட்ட தலைவா்களுடன் இணைந்து நகரம், பேரூராட்சி மற்றும் கிளை அளவில் நிா்வாகிகள் தோ்வு செய்யும் மறுசீரமைப்பு மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட இயக்க மறுசீரமைப்பு பொறுப்பாளா் டிடிகே.சித்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மண்டல தலைவா்கள் நியமனம் குறித்தும், வரும் உள்ளாட்சி தோ்தலில் காங்கிரஸ் கட்சியினா் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுக்கு ஆலோசனைகள் வழங்கி புதிய நிா்வாகிகளை தோ்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா் மணிமங்கலம் ஐயப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா, வட்டார காங்கிரஸ் தலைவா்கள் மணிகண்டன், நிக்கோலஸ், புஷ்பராஜ், மாவட்ட செயலாளா்கள் சரவணன், செல்வம் ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் பொருப்பாளா் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தேமுதிக ஒன்றிய செயலாளா் ஜெகதீஸ் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் தலைமையில் மறுசீரமைப்பு பொறுப்பாளா் டிடிகே.சித்திக் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.