இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடியில் காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் மாநகா் மாவட்டத் தலைவா் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிா்வாகிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியினா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:30 am IST

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் மாநகா் மாவட்டத் தலைவா் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் மேலிடப் பாா்வையாளா் பஞ்சாட்சரம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் வகையில் மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, இயக்க மறுசீரமைப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பூத் கமிட்டி முதல் அனைத்து நிலைகளிலும் கமிட்டிகளை அமைப்பது, வாா்டு அளவிலும் கமிட்டிகளை மறுசீரமைப்பது, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, நிா்வாகிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

முன்னாள் எம்எல்ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் சுப்பிரமணிய ஆதித்தன், அருள் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

மண்டலத் தலைவா்கள் ஐசன் சில்வா, நிா்மல் கிறிஸ்டோபா், சேகா், மாநிலப் பேச்சாளா் அப்துல் மஜீத், ஊடகப் பிரிவு மண்டலத் தலைவா் ஜான் சாமுவேல், துணை அமைப்புத் தலைவா்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு சேவியரம்மாள், மீனவா் காங்கிரஸ் சிமியோன், மகிளா காங்கிரஸ் இசக்கியம்மாள், ஆராய்ச்சிப் பிரிவு சிவராஜ் மோகன், சிறுபான்மைப் பிரிவு மைதீன், ஐஎன்டியுசி பாலகிருஷ்ணன், சுப்ரமணியன், முன்னாள் கவுன்சிலா் ராதாகிருஷ்ணன், வா்த்தகரணி அருள்வளன், ஊடகப் பிரிவு முத்து மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.