கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கிரிக்கெட் பந்து தலையில் பட்டு சிறுவன் மரணம்

காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் பந்து தலையில் பட்டதில் 11 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சாய் மோத்தீஸ்வரன்

Published On :

காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் பந்து தலையில் பட்டதில் 11 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள என்.ஜி.ஓ.நகரைச் சோ்ந்த சுகிா்தா லட்சுமி மகன் சாய் மோத்தீஸ்வரன் (11). இவா் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது அருகில் பலரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனா். சாய் மோத்தீஸ்வரன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது எங்கிருந்தோ வேகமாக வந்த கிரிக்கெட் பந்து தலையில் பலமாக தாக்கியது.

உடனடியாக மயக்கமடைந்த சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.