தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் விளையாடியபோது பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவன் பலி!

காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் விளையாடியபோது பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவன் பலியானது பற்றி....

Kanchipuram: 11-year-old boy dies after being struck on the head by a ball while playing cricket

கிரிக்கெட்.

Published On :

காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் விளையாடியபோது பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே என்ஜிஓ நகர் பகுதியைச் சேர்ந்த சுகிர்தா லட்சுமியின் 11 வயது மகன் சாய் மோதிஷ். இச்சிறுவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 26ஆம் தேதி அரசு விடுமுறையையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் சாய் மோதிஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, திடலில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், எங்கிருந்தோ வேகமாக வந்த கிரிக்கெட் பந்து எதிர்பாராதவிதமாக சிறுவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.

இந்த நிலையில், இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பலியானான். சிறுவனின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், காஞ்சி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

11-year-old boy dies after being hit on the head by a ball while playing cricket in Kanchipuram; incident causes deep sorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.