தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!

தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது தொடர்பாக...

National Sports Day CM Vijay greetings to sports...

தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து! - டிஎன்எஸ்

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:25 pm IST

தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு (ஆக.29) நாட்டின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் முதல்வர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, குழு உணர்வு, ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த களமாகவும் திகழ்கிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிக அவசியம். இளம்தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி, வெற்றிகளைக் குவித்து, இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன். விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் ! என கூறியுள்ளார்.

Summary

Tamil Nadu Chief Minister C Joseph Vijay urged the younger generation to make sports and physical exercise part of their daily lives.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.