தேசிய விளையாட்டு நாள்; மேஜர் தயான் சந்திற்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளது தொடர்பாக...

National Sports Day being observed today

தேசிய விளையாட்டு நாள்; விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து - DDT News

Published On :53 வினாடிகள் முன்பு

தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு (ஆக.29) நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டு ஜாம்பவான்களில் ஒருவரான மேஜர் தயான் சந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த விளையாட்டு ஜாம்பவான்களில் ஒருவரான மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆக.29 ஆம் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தேசிய விளையாட்டு நாளை முன்னிட்டு, இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை புகழஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தேசிய விளையாட்டு நாளில் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்! உங்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் மன உறுதிப்பாடு ஆகியவை நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றன.

இந்திய ஹாக்கியில் மேஜர் தயான் சந்த் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் அவரது அசாத்திய திறமை வரும் பல தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாள் நாட்டின் வளமான விளையாட்டு பாரம்பரியத்தைக் கொண்டாடுவதோடு, மக்கள் விளையாட்டைத் தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளவும் ஊக்குவிக்கிறது. 'அஞ்சலி', 'விளையாடு' மற்றும் 'இயக்கம்' ஆகிய முக்கிய அம்சங்களின் அடிப்படையில், தேசிய விளையாட்டு நாள் மூன்று நாள் நாடு தழுவிய பிரசாரமாக முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 'விளையாட்டு மைதானத்தில் ஒரு மணி நேரம்' என்ற முழக்கத்தின் கீழ் தேசிய விளையாட்டு நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தில்லியில், இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களுடன் மாண்டவியா பேசுகையில், மக்கள் ஆரோக்கியமாகவும் உடல் தகுதியுடனும் இருக்க வாரத்திற்கு ஒரு மணி நேரமாவது விளையாட்டு மைதானத்தில் செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒரு வளமான நாட்டை உருவாக்க உடல் தகுதியுள்ள இளைஞர்களும் ஆரோக்கியமான சமூகமும் அவசியம் என்று அவர் கூறினார்.

தான் நாள்தோறும் பூப்பந்து (பேட்மிண்டன்) விளையாடுவதாகக் கூறிய அர்ஜுன் ராம் மேக்வால், விளையாட்டு மக்களை ஆரோக்கியமாகவும் உடல் தகுதியுடனும் வைத்திருக்கவும், மன அழுத்தத்தை விலக்கி வைக்கவும் உதவுகிறது என்று தெரிவித்தார்.

உலக அரங்கில் நாம் நிகழ்த்தும் அசத்தலான சாதனைகள் விளையாட்டு உலகில் புதிய இந்தியாவின் எழுச்சிக்கு சான்றளிக்கின்றன.

இந்தியாவின் விளையாட்டுச் சூழல் அமைப்பில் அரசு தொடர்ந்து முதலீடுகளைச் செய்து வருகிறது; இதன் பலன்கள் உலக அரங்கில் பெருகிய முறையில் காணப்படுகின்றன. ஒலிம்பிக், பாராலிம்பிக் மற்றும் பலதரப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடுகள், நாட்டின் வளர்ந்து வரும் வலிமையை பிரதிபலிக்கின்றன.

2013-14 ஆம் ஆண்டில் சுமார் ரூ.1,200 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.4,400 கோடிக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் ஒலிம்பிக் பயணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரியோ 2016-ல் இரண்டு பதக்கங்களையும், டோக்கியோ 2020-ல் ஏழு பதக்கங்களையும், பாரிஸ் 2024-ல் ஆறு பதக்கங்களையும் இந்தியா வென்றது. பாராலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியாவின் செயல்பாடுகள் வியக்கத்தக்க வகையில் மேம்பட்டுள்ளது. ரியோ 2016-ல் நான்கு பதக்கங்களாக இருந்த எண்ணிக்கை, டோக்கியோ 2020-ல் 19-ஆக உயர்ந்தது.

பாரிஸ் 2024-ல், 29 பதக்கங்களை வென்று இந்தியா தனது சிறந்த பாராலிம்பிக் செயல்பாட்டைப் பதிவு செய்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா தொடர்ந்து தனது செயல்பாட்டை மேம்படுத்தி வருகிறது. 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 57 பதக்கங்களை வென்ற இந்தியா, 2018-ல் அந்த எண்ணிக்கையை 69-ஆக உயர்த்தியது; மேலும் 2023-ல் சாதனை அளவாக 107 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது.

'கேலோ இந்தியா', 'டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டம்' மற்றும் 'கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமையாளர்களைக் கண்டறிதல்' திட்டம் போன்ற முன்னெடுப்புகள், விளையாட்டுச் சூழலை வலுப்படுத்துவதோடு, உயர்மட்டப் போட்டிகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள உதவுகின்றன.

Summary

Initiatives such as Khelo India, the Target Olympic Podium Scheme, and Khelo India Rising Talent Identification are strengthening the sporting ecosystem and helping athletes prepare for competition at the highest level.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.