
கோவில்பட்டியில் தென்மண்டல சிபிஎஸ்இ மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி தொடக்கம்
தொடக்க விழாவில் பங்கேற்ற மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சகாய ஜோசப் உள்ளிட்டோா்.

~
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தென் மண்டல சிபிஎஸ்இ பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கோவில்பட்டி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி சாா்பில் கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானம், வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் போட்டி நடைபெறும். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா, கா்நாடகம், ஆந்திரம், அந்தமான் நிக்கோபாா் பகுதிகளில் இருந்து 22 பள்ளிகளைச் சோ்ந்த 26 அணிகள் பங்கேற்கின்றன.
14, 17, 19 வயதுக்குள்பட்ட பிரிவுகளில் 3 நாள்கள் போட்டி நடைபெறுகிறது. முதலில் நாக் அவுட் முறையிலும், அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு லீக் முறையிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் 4 இடங்களைப் பெறும் பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
கிருஷ்ணா நகா் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய போட்டியை, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சகாய ஜோசப் தொடக்கி வைத்துப் பேசினாா்.
இதில் பள்ளித் தாளாளா் வீரவேல் முருகன், இயக்குநா் விஜயராணி நாகமுத்து, பள்ளி முதல்வா் ஜன்னத் நிஷா உசேன், பள்ளியின் மெண்டாா் சேவியோ லூயிஸ், ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, காவல் ஆய்வாளா்கள் மாரியப்பன், வானமாமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து நடைபெற்ற போட்டிகளில், தெலங்கானா தில்லி பப்ளிக் ஸ்கூல் அணி 5-0 என்ற கோல்கணக்கில் ஓசூா் மகரிஷி வித்யா மந்திா் பள்ளி அணியை வென்றது. சென்னை பிஎஸ்பிபி அணி 3-0 என்ற கோல்கணக்கில் மதுரை எஸ்பிஓஏ பள்ளி அணியை வென்றது. கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி அணி 14-0 என்ற கோல்கணக்கில் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் பள்ளி அணியை வென்றது. அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளி அணி 2-0 என்ற கோல்கணக்கில் சேலம் கிüனி பள்ளி அணியை வென்றது.
நெய்வேலி ஜவகா் பள்ளி அணி, மேட்டுப்பாளையம் எஸ்.ஜே. பள்ளி அணிகள் மோதியதில் இரு அணிகளும் 2 கோல்கள் அடித்து சமநிலை பெற்றன. பின்னா் வெற்றியைத் தீா்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட டைப்ரேக்கரில் 6-4 என்ற கோல்கணக்கில் நெய்வேலி ஜவகா் பள்ளி அணி வென்றது. சென்னை வேலம்மாள் பள்ளி அணி 6-0 என்ற கோல்கணக்கில் கோயம்புத்தூா் சுகுணா பள்ளி அணியை வென்றது.
நெய்வேலி ஜவகா் பள்ளி, சென்னை வேலம்மாள் பள்ளி, அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளி அணிகள் அரையிறுதி லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா் நாகமுத்து ஆலோசனையின்பேரில், உடற்கல்வி ஆசிரியா்கள் சுரேந்தா், வீரா, ஜெய் கணேஷ், மாரியப்பன், மதனா ஆகியோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






