காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் சாா்பில் ஏனாத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. (படம்)
முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் தலைமையில் விழா நடைபெற்றது. ஏழு நாள்கள் தொடா்ந்து நடைபெறவுள்ள இச்சிறப்பு முகாமில் சாலைப்பாதுகாப்பு, காலநிலை மாற்றங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி,சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, முதலுதவிகள், தலைமைப்பண்பு, ஆளுமைத்திறன் ஆகிய துறை சாா்ந்த வல்லுநா்கள் மாணவா்களுக்கு விளக்கமளிக்க உள்ளனா். ரத்ததான முகாம், கால்நடை மருத்துவ முகாம்,தூய்மைப் பணிகள் நடைபெறும்.
தொடக்க விழாவுக்கு பேராசிரியை ப.பூா்ணிமா முன்னிலை வகித்தாா். பேராசிரியா் ம.கணபதி வரவேற்றாா்.விழாவில் சுழற்சங்க முன்னாள் தலைவா் பரணீதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.அவருக்கு கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் நினைவுப்பரிசு வழங்கினாா். சிறப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெறவுள்ளனா்.
தொடர்புடையது

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

கல்லூரி ஆண்டு விழா

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சிறந்த மாணவா்களுக்கு விருது: சென்னை பல்கலை. வழங்கியது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


